எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

காரா பூந்தி

காரா பூந்தி

தேவையான பொருட்கள்:
கடலை மாவு –  1 கப்
அரிசி மாவு – 1 டீ.ஸ்பூன்
சோடா உப்பு – 1 பின்ச்

பூண்டு, கறிவேப்பிலை, பெருங்காயம் – சிறிதளவு
உப்பு, மிளகாய் தூள் – ½ டீ.ஸ்பூன் (ருசி பார்த்து, தேவையென்றால் கூட்டி கொள்ளலாம்.)

செய்முறை:



முதலில் மாவை சலிக்கவும்.





பின் கடலை மாவு,சோடா உப்பு மற்றும் அரிசி மாவை பஜ்ஜிமாவு பதம் கரைக்கவும்.

எண்ணையை நன்கு காய வைக்கவும்.
குறிப்பு: பூந்தி செய்ய எண்ணை நல்ல சூட்டில் இருக்க வேண்டும் இல்லையேல் பூந்தி சப்பையாக வரும்.

பின் பூந்தி கரண்டியில் மாவை ஊற்றி தேய்த்து விட்டு, திருப்பி திருப்பி விடவும்.  நன்கு மொறு மொறுப்பு சத்தம் வந்ததும், எடுத்து விடவும்.




இது போல மீத மாவையும் செய்து முடிக்கவும்.






பின் பூண்டு,கறிவேப்பிலையை பொறித்து சேர்க்கவும்.
பின்  உப்பு, மிளகாய் தூள், பெருங்காயம் சேர்க்கவும்.




அணைத்தையும் நன்றாக கலந்து ஒரு ஏர்-டைட் பாக்ஸில் போட்டு வைக்கவும்.


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...