எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

லட்டு/Laddu

லட்டு

தேவையான பொருட்கள்
கடலை மாவு –  1 கப் 
சர்க்கரை - 1 கப்
தண்ணீர் –  ¼ கப்
கலர் பொடி – சிறிதளவு
(1 கப் = 200 கிராம்)



ஏலக்காய் – 5 முதல் 8 வரை
லவங்கம், ஜாதிகாய் – சிறிதளவு






நெய் –  2 ஸ்பூன் 

உலர் திராச்சை, முந்திரி – தேவைக்கேற்ப

செய்முறை:




முதலில் மாவை சலிக்கவும்.






பின் சர்க்கரையை தண்ணீர் சேர்த்து, 1 கம்பி பதம் பாகு வரும் வரை காய்ச்சவும்.





கலர் சேர்க்கவும்.






சர்க்கரையில் உள்ள அழுக்கை அகற்ற, சிறிது பால் (அ) எலுமிச்சை சாறு சேர்க்கவும்.







பின் மாவை பஜ்ஜிமாவு பதம் கரைக்கவும்.





எண்ணையை நன்கு காய வைக்கவும்.

குறிப்பு: 

பூந்தி செய்ய எண்ணை நல்ல சூட்டில் இருக்க வேண்டும் இல்லையேல் பூந்தி சப்பையாக வரும்.




பின் பூந்தி கரண்டியில் மாவை ஊற்றி தேய்த்து விட்டு, திருப்பி திருப்பி விடவும்.




 ( அவ்வாறு செய்யும் பொழுது கட்டி சேராது, சிறிது நேரம் களித்து பூந்தியின் சத்தம் சடசட என்று கேட்கும்,


அப்பொழுது வெந்து விட்டது என அர்த்தம். )

(நீண்ட  நேரம் விட்டால் மொறுமொறுப்பாகி விடும், பாகில் ஊறாது.)






பின் அதை வடித்து, பாகில் சேர்த்து கலக்கவும்.






இது போல மீத மாவையும் செய்து முடிக்கவும்.








ஒவ்வொரு முறையும் கலந்து விடவும்.












கடைசியாக ஏலக்காய்,ஜாதிக்காய்,லவங்க பொடி சேர்த்து,  நெய்யில் வறுத்த முந்திரி திராச்சையை சேர்த்து, கலக்கி சிறிது நேரம் மூடி வைக்கவும்.






நன்கு ஊறியதும் , ஒவ்வொரு பாகமாக பிரித்து, கையில் நன்கு மசித்து, பின் உருண்டைகளாக பிடிக்கவும்.





சிலருக்கு பூந்தியாகவே லட்டில் தெரிய வேண்டும், அதனால் லேசாக மசித்து உருண்டைகளாக பிடிக்கவும்.


குறிப்பு:

லட்டை பிடிக்காமல் உதிரியாகவே வைத்து கொள்ளலாம்.

உதிரியாக செய்யும் பொழுது, வேறு நிற பொடிகளும் சேர்க்கலாம்.

விருப்ப பட்டால் கல்கண்டு, ரோஃஸ் எசன்ஃஸ் சேர்க்கலாம்.



டிப்ஸ்:

(ஒரு வேளை பூந்தி உதிரியாக இருந்து லட்டு பிடிக்க வரவில்லை என்றால் சிறிது சுடு தண்ணீரை தெளித்து, பிசைந்து , பிடிக்கவும்.

அல்லது 

எல்லா பூந்தியை போட்டு கலக்கியும், பாகு மீதம் அடியில் இருந்தால், மேலும் கொஞ்சம் பூந்தியை செய்து , அதில் சேர்த்து கலக்கவும்)


2 comments:

  1. நன்றி. நானும் செய்து பார்க்க போகிறேன்..

    ReplyDelete
  2. தகவலுக்குநண்றி

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...