எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

எலுமிச்சை ஸ்குவேஷ் / Lemon Squash

எலுமிச்சைபழம் ஸ்குவேஷ்

தேவையான பொருட்கள்

எலுமிச்சைபழம் –10
1 பழத்திற்கு 3 டே.ஸ்பூன்(45 கிராம்) சர்க்கரை என்ற கணக்கிற்கு எடுத்து கொள்ளவும்.
10 பழத்திற்கு 450 கிராம் சர்க்கரையை எடுத்து கொள்ளவும்.
தண்ணீர் சர்க்கரையின் பாதி அளவு, அதாவது 200 + 25 மி.லி.




ஏலக்காய் தூள் – சிறிதளவு






செய்முறை:



முதலில் சர்க்கரையை தண்ணீர் சேர்த்து , அடுப்பில் வைத்து மிதமான தனலில் சர்க்கரையை கரையவிடவும்.






பின் கொதிக்க வைக்கவும். கொதிக்கும் பொழுது, சர்க்கரையில் உள்ள அழுக்கு மேலே வரும்.


அப்பொழுது ஒரு எலுமிச்சைபழத்தை பிழிந்தால் ,அழுக்கு ஒதுங்கிவரும். ஒரு கரண்டியால் எடுத்து விடவும்.







பின் ஏலக்காய் தூள் சேர்த்து , பாகு வராமல் பிசுக்கு தன்மை வந்ததும், அடுப்பை அணைத்து, ஆற விடவும்.










பின் எலுமிச்சைபழத்தை பிழிந்து, வடிகட்டவும்.









ஆறிய சர்க்கரையில் எலுமிச்சைபழ சாறை கலக்கி, பின் வடிகட்டி, ஒரு சுத்தமான பாட்டிலில் ஊற்றி
வைக்கவும்.






பறிமாறும் பொழுது, 1:3 அதாவது ¼ கப் ஸ்குவேஷ்கு ¾ கப் சில் தண்ணீர் சேர்த்து கலக்கி அருந்தவும்.




சிறிது சோடா , புதினா தழை சேர்த்தும்  அருந்தலாம்.


குறிப்பு:

நாம் செய்யும் பொழுது, கையிலோ , பாட்டிலிலோ ஈரம் இருக்க கூடாது. ஏனெனில் ஸ்குவேஷ் புளித்து (கெட்டு போய்) விடும்.

ப்ரிசர்வேடீவ் எதுவும் சேர்க்காததால் , குளிர் சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்தவும்.

எலுமிச்சை பழத்தை முதலிலேயே பிழிந்து வைத்தால் சுவை மாறிவிடும்.அதனால் கலக்கும் பொழுது பிழிந்தால் போதும்.

இதே செய்முறையில் மாம்பழம், திராச்சை, பிற பழங்களிலும் செய்யலாம்.
பிற பழங்களில் , முதலில் பழகூழ் எடுத்து, அதற்கேற்ப சர்க்கரை சேர்க்கவும்.

அளவு:
1 கப் பழகூழ் என்றால்
2 கப் சர்க்கரை + 1 கப் தண்ணீர்
(ஏலக்காய் வேண்டாம். விருப்பபட்டால் எசன்ஃஸ் – மாம்பழம், திராச்சை , கடைசியில் சேர்க்கலாம்)
மேற்கூரியபடி சர்க்கரை தண்ணீர் ஆறியவுடன் பழகூழ் சேர்த்து நன்கு கலக்கிவைக்கவும்.
பறிமாறும் பொழுது, 1:3 அதாவது ¼ கப் ஸ்குவேஷ்கு ¾ கப் சில் தண்ணீர் சேர்த்து கலக்கி அருந்தவும்.





No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...