3 முறை சலிக்கவும்.
1 கப் மாவிற்கு ¾ கப் சர்க்கரை, ¾ கப் வெண்ணெய் , 3 முட்டை எடுத்துக்கொள்ளவும்.
1 கப் = 200 கிராம்
1 டீஸ்பூன் = 5 கிராம்
1 டே. ஸ்பூன் = 15 கிராம்
சர்க்கரையை தூள் செய்யவும்.
மற்ற பொருட்கள் ரூம் டெம்பரேச்சரில் இருக்க வேண்டும்.
பின் மைக்ரோவேவ் ஒவனை , கன்வென்ஷன் மோடில் ப்ரீ-ஹீட் செட் செய்யவும்.
கேக் டின்னை வெண்ணெயால் க்ரீஷ் செய்து, மைதா மாவை தூவி, பரவலாக தட்டி , மீதிமாவை கீழே கொட்டவும்.
இப்பொழுது செய்முறையை ஆரம்பிக்கலாமா.....
<!--[endif]-->பின் சர்க்கரைத்தூளை சேர்த்தடிக்கவும்.
பின் சலித்த மாவை சேர்த்து கரண்டியால் ஒரே புறம் கலக்கவும்.
பின் அடித்த வெள்ளை முட்டையை சேர்த்து கரண்டியால் ஒரே புறம் கலக்கவும்.
மாவு கெட்டியாக இருந்தால், ¼ கப் பால் சேர்த்து கரண்டியால் ஒரே புறம் கலக்கவும்.
மாவுக்கலவையை கேக் டின்னில் ஊற்றி , ஓவனில் 180 டிகிரி செல்சியஃஸில் 25 நிமிடம் பேக் செய்யவும்.
பேக்கானதை உறுதி செய்ய , ஒரு கத்தியால் கேக்கின் நடுவில் குத்தினால் மாவு ஒட்டாமல் வரும். வந்தால் மீண்டும் ஓவனில் 5 நிமிடம் பேக் செய்த்தெடுக்கவும்.
பேக் ஆனதும், ஒரு ரேகின் மேல் கேக்கை வைத்து நன்கு ஆறவிடவும்.
இது தான் பேசிக் ஸ்பாஞ்ச் கேக்.
இப்பொழுது ஐசிங் செய்வதை பார்க்கலாம்.
கேக்கின் மேல் ஐசிங் செய்ய சில டிப்ஸ்:
சாதாரணமாக கேக் ஆறிய பின்புதான் ஐசிங் போட வேண்டும்.
கேக்கின் மேல் ஐசிங் போடுவதற்கு முன்னால் மேலாக இருக்கும் உதிரித் துகள்களை எடுக்க வேண்டும். தூள் இருந்தால் ஐசிங் ஒட்டாது.
சாதாரணமாக ரோல் கேக் செய்ய ½ இன்ச் கேக்கை எடுத்து கொள்ளவும்.
ரோல் செய்யும் போது கேக் உடையாமல் இருக்க:
ஒரு ஈரத்துணியின் மேல் கேக்கை வைக்கவும்.
கேக்கின் மேல் ஐசிங் சர்க்கரையை (icing sugar) தூவி விடவும்.
துணியுடன் கேக்கை ரோல் செய்து சிறிது நேரம் வைக்கவும்.
இப்பொழுது பட்டர் ஐசிங் கலவையை செய்யலாம்:
1 கப் ஐசிங் சர்க்கரை
½ கப் வெண்ணை
2 டே.ஸ்பூன் கோகோ பௌடர்
2 டே.ஸ்பூன் உருக்கிய சாக்கலேட்
எசன்ஃஸ் தேவைப்பட்டால்
முதலில் வெண்ணையை க்ரீம் போல் அடிக்கவும்.
பின் ஐசிங் சர்க்கரை சேர்த்து அடிக்கவும்.
பின் உருக்கிய சாக்கலேட் சேர்த்து கலக்கவும்.
பின் கோகோ பௌடர் சேர்த்து கலக்கவும்.
குறிப்பு:
1. வெண்ணைக்கு பதில் விப்பிங்க் க்ரீம் பயன் படுத்தலாம்.
2. விப்பிங்க்ரீமுடன் சாக்கலேட் கலந்து தடவலாம்.
ஐசிங் செய்ய:
ரோல் செத்து வைத்த கேக்கை பிரித்து, சர்க்கரைத் தண்ணீரை நன்கு தெளித்து விடவும்.
க்ரீமை தடவவும்.
பின் மெதுவாக கேக்கை ரோல் செய்யவும்.
கேக்கின் ஒரு முனையை வெட்டி, கேக்கின் மேல் மரத்துண்டு போல் வைக்கவும்.
க்ரீமை தடவி ஒரு ஃபோர்கால் லேசாக கீரி விட்டு அலங்கரிகவும்.
இந்த கேக்கை வெட்டினால் , சாக்கலேட் ஸ்விஸ் ரோல் ஆகும்.
இதே கேக்கில் ஜாம் தடவினால் ஜாம் ரோல்.
No comments:
Post a Comment