எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Puffed rice balls / பொரி உருண்டை






முதலில் 3 கப் பொரியை வாணலியில் லேசாக வறுத்து வைத்து கொள்ளவும்.



பின் 1 கப் வெல்லத்தில், 1/4  கப் தண்ணீர் சேர்த்து, கரைத்து வடிகட்டவும்.





பின் அதை வாணலியில் ஊற்றி  பந்து பதம் பாகு வரும் வரை, குறைந்த தீயில் கிளறவும்.




குறிப்பு: பாகின் வகைகள்

பாகை கையில் தொட்டு , விட்டு விட்டு பார்த்தால் ஒரு கம்பி வரும், அது ஒற்றை கம்பி .


பாகை கையில் தொட்டு , விட்டு விட்டு பார்த்தால் இரு கம்பி வரும், அது இரட்டை  கம்பி .

அதற்கு பின் பாகு சிறிது கெட்டி படும், அப்பொழுது ஒரு துளி தண்ணீரில் விட்டால்,  மேலே உள்ள படத்தில் இருப்பது போல், கரையாமல் , கையில் எடுத்தால் பந்து போல் உருட்ட வரும். 

அப்பொழுது அடுப்பை அணைக்கவும்.





பின் வெல்ல பாகை பொரியில் ஊற்றி, சமமாக கலக்கவும்.




கையில் நெய் தடவி, உருண்டைகளாக இருக்கி பிடிக்கவும்.


ஒரு வேளை உருட்ட வேண்டாம்  அல்லது முடியவில்லையா?




சப்பாத்தி கல்லில் நெய் தடவி, அதன் மேல் கொட்டி, சமமாக கெட்டியாக அமுக்கி விடவும்.

பாதி  ஆறியதும், கத்தியில் நெய் தடவி துண்டுகள்  போடவும்.



ஒரு பாக்ஸில் போட்டு, கெட்டியாக மூடி வைக்கவும். இல்லையென்றால் பொரி நமுத்து விடும்.














1 comment:

Related Posts Plugin for WordPress, Blogger...