எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

மேராக்காய் கூட்டு



செய்முறை


கூட்டு பருப்பு =  பச்சை பயிரை வறுத்து உடைத்தது

பாசிப்பருப்பு - 1/2 கப் கழுவி , காயை நறுக்கும் வரை ஊறவைக்கவும்.



மேராக்காயை தோல் சீவி, நறுக்கிக் கொள்ளவும்.




குக்கரில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு கறிவேப்பிலை மிளகாய் தாளித்து, அதனுடன் சின்ன வெங்காயம் , தக்காளி ( 1), பச்சை மிளகாய்(2), மேராக்காய் சேர்த்து வதக்கி, பின் மஞ்சதூள், சாம்பார் தூள் (1 ஸ்பூன்) சேர்க்கவும்.



பின் அதனுடன் பருப்பு, தேங்காய் 2 ஸ்பூன், உப்பு, மூழ்கும் வரை தண்ணீர்  சேர்த்து, மிதமான தனலில் 1 விசில் விட்டு , அடுப்பை அணைக்கவும்.
கொத்தமல்லி தூவி பறிமாறவும்.
விருப்பப்பட்டால் கூட்டு வடகம் தாளித்து சேர்க்கவும்.
இது சாதம் , சப்பாத்தியுடன் பறிமாறலாம்.






















Related Posts Plugin for WordPress, Blogger...