எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

காராமணி கோஸ் கிழங்கு சப்ஜி

காராமணி சப்ஜி


செய்முறை


1/2 கப் பயிரை வேகவைத்து கொள்ளவும்.




ஒரு கடாயில் 1 ஸ்பூன்  எண்ணெய் ஊற்றி, கடுகு கறிவேப்பிலை தாளித்து, அதனுடன்
சின்ன வெங்காயம் - 1/4 கப்
தக்காளி - 1 நறுக்கியது
முட்டைகோஸ் - 1/2 கப்  நறுக்கியது
உருளைக்கிழங்கு - 1  நறுக்கியது
பச்சை மிளகாய் - 2  நறுக்கியது
சேர்த்து வதக்கவும்.





காய் நன்கு வதங்கியதும், 
மஞ்சதூள் - 1/2 ஸ்பூன்
சாம்பார் தூள் - 1 டீ.ஸ்பூன்
சேர்த்து வதக்கி, பின் வேகவைத்த பயிர், சிறிது தேங்காய் சேர்த்து, உப்பு சேர்த்து , மூடி வேகவைக்கவும்.



காய் வெந்தவுடன் சிறிது புளி கரைசல் விட்டு, கொத்தமல்லி தூவி, 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.



இது சப்பாத்தி, சாதம், தோசையுடன் பறிமாறலாம்.






Related Posts Plugin for WordPress, Blogger...