பீர்கங்காய் சட்னி
பீர்க்கங்காயை 1 பெரியது, தோல் சீவி, பொடியாக
நறுக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, 1 கப் வெங்காயம், 4
மிளகாய், ½ டீ.ஸ்பூன் சீரகம், சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் பாதி வதங்கியதும், காயை சேர்த்து,
நன்கு வதக்கவும்.
காய் வதங்கியதும், அடுப்பை அணைத்து, 2 டீ.ஸ்பூன்
தனியாதூள், புளி
(நெல்லி அளவு), உப்பு, சேர்த்து, ஆறியதும்,
தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும்.
குறிப்பு:இதே முறையில் பீர்கங்காயிற்கு பதில், கத்தரிக்காய் (அ) வறுத்த வேர்க்கடலையை வெங்காயம் வதங்கியதும் சேர்க்கவும் (அ), வறுத்த எள் வெங்காயம் வதங்கியதும் சேர்க்கவும். கேரட் பீட்ரூடிலும் செய்யலாம்.
குறிப்பு:இதே முறையில் பீர்கங்காயிற்கு பதில், கத்தரிக்காய் (அ) வறுத்த வேர்க்கடலையை வெங்காயம் வதங்கியதும் சேர்க்கவும் (அ), வறுத்த எள் வெங்காயம் வதங்கியதும் சேர்க்கவும். கேரட் பீட்ரூடிலும் செய்யலாம்.
இது இட்லி, தோசை, சாதம், ரொட்டி உடன்
பறிமாறலாம்.
No comments:
Post a Comment