எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

வெஜ் ப்ரியானி



வெஜடபிள்  பிரியானி

தேவையான பொருட்கள்

பாஸ்மதி அரிசி – 2  கப் (400 கி)


கேரட், பீன்ஸ், பீட்ரூட், பட்டாணி, காலிஃப்லவர், டர்னிப், உருளைக்கிழங்கு நறுக்கியது – 500 கிராம்


சோயா- ¼ கப் (சுடு தண்ணீரில் ஊறவைத்து, பிழிந்து விடவும்.



பட்டை , லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை – சிறிதளவு

பட்டை(2) , லவங்கம்(4), சோம்பு(2 டீ.ஸ்பூன்), காய்ந்த மிளகாய்(3), இஞ்சி, பூண்டு(10 பல்)  விழுது – 3  டே. ஸ்பூன்


பச்சை மிளகாய் – 2
தயிர் – 1 ஸ்பூன்
பெரிய வெங்காயம் -1
தக்காளி – 1


புதினா, கொத்தமல்லி  2  கைபிடி
உப்பு
எண்ணெய் – 2 குழிக்கரண்டி
நெய் -1 டே.ஸ்பூன்




செய்முறை:



குக்கரில் எண்ணை ஊற்றி சூடானதும், பட்டை , லவங்கம், ஏலக்காய் , பி.இலை தாளிக்கவும்.
அதனுடன் மசாலா விழுது போட்டு நன்கு வதக்கவும்.


பின் நறுக்கிய  வெங்காயம் , தக்காளி  பச்சை மிளகாய் மற்றும்  பாதி புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கி



பின்  காய்களை போட்டு, தயிர் சேர்த்து நன்கு வதக்கவும்.



பின் ஊறவைத்த அரிசி போட்டு மெதுவாக கலக்கவும்.



(குறிப்பு:  அரிசியை கழுவி, பின் 2 கப் அரிசிக்கு, 3 ½    கப்  தண்ணீர் ஊற்றி 20 நிமிடம் ஊறவைக்கவும்.
அத்தண்ணீரை வடிகட்டி அரிசியை மேலே கூறியவாறு கலக்கவும். இவ்வாறு செய்யும் போது சாதம் உதிறியாக வரும்.)


அரிசியை உடையாமல் கலக்கியதும், வடித்த தண்ணீர் ஊற்றி,  உப்பு, நெய் மற்றும் புதினா, கொத்தமல்லி போடவும்.

கிளறி மூடவும்.

ஹையில் ஒரு விசில் வந்ததும் தீயை முழுதாக குறைத்து 5 நிமிடம் விட்டு அடுப்பை அணைக்கவும்.



தயிர் பச்சடியுடன் பறிமாறவும்.

இது ப்ரியானிக்கு நல்ல காம்பினேசன்.








No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...