எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

முட்டை ஃப்ரைட் ரைஸ்



                                             செய்முறை


பாஸ்மதி சாதம்


முதலில் 1 கப் பாஸ்மதி அரிசியை கழுவி, 2 கப் தண்ணீரில் 15 நிமிடம் ஊறவைக்கவும்.
பின் அதில் 1 ஸ்பூன் ஆயில் மற்றும் சாதத்திற்கு தேவையான உப்பு சேர்த்து,  1 விசில் விட்டு, சாதத்தை ஆற வைக்கவும்.


ஒரு கடாயில் 3 டே.ஸ்பூன் ஆயில் ஊற்றி, அதில் பொடி செய்த 5 பல் பூண்டை போட்டு வதக்கவும்.



                         
பின் அதில் வெங்காயத்தை (வெங்காய தாளில் உள்ளது)  1/4 கப் சேர்த்து  வதக்கவும்.





பின் 1/2 கப்  மிக பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ் சேர்த்து, சிறிது அஜினோ மோட்டோ தூவி வதக்கவும், வதங்கியதும்  , படத்தில் உள்ளது போல் நடுவில் செய்து  , 1 ஸ்பூன் ஆயில் விடவும்.




அதில் உப்பு,மிளகு தூள் சேர்த்து அடித்து வைத்த  4 முட்டையை  ஊற்றி வறுக்கவும்.






பின் அதில் சாதத்தை சேர்த்து  கிளறி, வெங்காய தாள் தூவி,  சாஸ் மற்றும் மஞ்சூரியனுடன் சூடாக பறிமாறவும்.




Related Posts Plugin for WordPress, Blogger...