எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

ட்ரேகன் பேபி கார்ன்



செய்முறை



முதலில்
மைதா - 2 டே.ஸ்பூன்
சோள மாவு - 2 டே.ஸ்பூன்
அரிசி மாவு - 2 டே.ஸ்பூன்
மிளகு தூள் - 1 டீ.ஸ்பூன்
உப்பு
முட்டை - 1

இவை அணைத்தையும் தோசைமாவு பதத்திற்கு கட்டி இல்லாமல் கரைத்து, அதில் கட் செய்த பேபி கார்னை பிரட்டி, எண்ணையில் பொறித்தெடுக்கவும்.

பேபிகார்ன் - 10 




பின் ஒரு கடாயில் 2 டே.ஸ்பூன் ஆயில் ஊற்றி


நறுகிய பூண்டு ( 5 பல் ), முந்திரி பருப்பு சேர்த்து வதக்கவும்.




பின் வெங்காய தாளில் உள்ள வெங்காயத்தை நறுக்கி சேர்த்து, வதக்கவும், வதங்கும் பொழுது  சாஸ்களை கலக்கி வைக்கவும்


சிவப்பு மிளகாய் விழுது - 2 டீ.ஸ்பூன்
தக்காளி சாஸ் - 2 டே.ஸ்பூன்
சோயா சாஸ் - 1 டே.ஸ்பூன்
சர்க்கரை - 1 டீ.ஸ்பூன்
உப்பு - சிறிது

இவை அணைத்தையும் கலக்கவும்.


வெங்காயம் வதங்கியதும் 1/2  கப் குடை மிளகாயை சேர்த்து, வதக்கவும்.


பின் கலக்கி வைத்த சாஸ்களை ஊற்றி  மிதமான தீயில் கலக்கவும்.


பின் பொறித்த கார்னை சேர்த்து கலக்கி, வெங்காய தாள் தூவி சூடாக பறிமாறவும்.



இது ஃப்ரைட் ரைஸ், நான் , ரோடி  உடன் சுவையாக இருக்கும்.












No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...