தேவையான பொருட்கள்
மைதா- 200 கிராம்
பேக்கிங்க்பௌடர் - 1/2 டே.ஸ்பூன்
(அ)
1 கப்
கோகோ பௌடர் - 50 கி
கண்டென்ஸ்ட் மில்க் - 1 டின்
வெண்ணெய் - 50 கி
கோக் - 200 மி.லி
அணைத்து பொருட்களும் ரூம் டெம்பரேச்சரில் இருக்க வேண்டும்.
செய்முறை
முதலில் மைக்ரோ வேவ் ஓவனை கன்வென்சன் மோடில் 180* c இல், ப்ரீ ஹீட் செட் செய்யவும்.
பின் கேக் டின்னை வெண்ணெய் தடவி, மைதா மாவு தூவி, தட்டி விடவும்.
பின் மாவுடன் கோகோவை சேர்த்து 3 முறை சலித்து வைக்கவும்.
வெண்ணெய் மற்றும் கண்டென்ஸ்ட் மில்கை நன்கு அடிக்கவும்.
பின் சிறிது மாவு, சிறிது கோக் என்ற முறையில் கலக்கவும்.
மாவை எடுத்து விட்டால் ரிப்பன் போல் விழ வேண்டும்.
பின் அதை டின்னில் ஊற்றி, 180*C இல் 20 நிமிடம் பேக் செய்யவும்.
ஒரு டூத் பிக் அல்லது கத்தியை , கேக்கின் நடுவில் விட்டால் ஒட்டாமல் வரும்.
பின் அதை ஒரு வயர் ரேகின் மேல் ஆறவிட்டு, கட் செய்யவும்.
No comments:
Post a Comment