எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Avial / அவியல்



தேவையான பொருட்கள்

கேரட், பீன்ஸ், அவரைக்காய், முருங்கைக்காய், கொத்தவரங்காய், வாழைக்காய், சேனை.கிழங்கு, புடலங்காய் = இவை அணைத்தையும் ஒன்றாக அவியலுக்கு பயன்படுத்தலாம்.
இவற்றில் தேவையான காய்களை விருப்பம்போல் எடுத்துக்கொள்ளலாம்.

அரைக்க:

தேங்காய் துருவல், சீரகம், பச்சைமிளகாய் , காயின் அளவை கொண்டு எடுத்துக்கொள்ளவும்.
1 கப் காய்கள் என்றால் , ¼ கப் தேங்காய், ½ டீ.ஸ்பூன் சீரகம், 2 பச்சைமிளகாய் உபயோகிக்கவும்.

தேங்காய் எண்ணை, கறிவேப்பிலை சிறிதளவு
தயிர் ½ கப், அல்லது தேவைக்கேற்ப


செய்முறை


காய்களை தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.
பாதி வெந்தவுடன் அரைத்த விழுதை சேர்த்து, காய் வெந்து நீர் சுண்டும் வரை விட்டு, அடுப்பை அணைக்கவும்.


உடனே தேங்காய் எண்ணை, கறிவேப்பிலை சிறிதளவு சேர்த்து கலக்கி ஆறவிடவும்.


பின் தயிரை சேர்த்து கலக்கி பறிமாறவும்.

இதனை அடையுடன் பறிமாறலாம்.

இதை அப்படியே தனியாகவும் சாப்பிடலாம்.



Related Posts Plugin for WordPress, Blogger...