தேவையான
பொருட்கள்
கோதுமை மாவு – 2 கப்
முள்ளங்கி – 1
(தோல் சீவி துருவி கொள்ளவும் )
வெந்தய கீரை – 1 கட்டு
(சுத்தம் செய்து நறுக்கவும் )
சீரக தூள் – ½ டீ.ஸ்பூன்
மிளகாய் தூள் – 1
டீ.ஸ்பூன்
உப்பு
எண்ணெய்
குறிப்பு:
சிறிது மஞ்சதூள் சேர்க்கலாம்.
விருப்பப்பட்டால் துருவிய கேரட், பீட்ரூட் சேர்க்கலாம்.
செய்முறை
கோதுமை மாவோடு முள்ளங்கி
, வெந்தய கீரை ,சீரக தூள் ,மிளகாய் தூள் உப்பு சேர்த்து பிசறவும். காயில் உள்ள நீர் தன்மை மாவோடு சேர்ந்து
வற்றியவுடன், 1 டே.ஸ்பூன் ஆயில் சேர்த்து
சமமாக கலக்கவும்.
பின் தேவையான
தண்ணீர் சேர்த்து மிருதுவாக பிசைந்து சிறிது நேரம் மூடி வைக்கவும்.
பின் அதை சமமான
வடிவில் உருண்டைகளாக்கி, தேய்த்து, கல்லில் இருபுறமும் வேகவைத்து பறிமாறவும்.
தேவைப்பட்டால் நெய் அல்லது எண்ணெய் சிறிது மேலே ஊற்றி சுடவும்.
No comments:
Post a Comment