எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

ஆலு மேத்தி



தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு – 2 பெரியது

வெந்தய கீரை – 1 கட்டு சிறியது
வெங்காயம் – 1 பெரியது
பச்சை மிளகாய் – 1
உப்பு, மஞ்சதூள்
கறிமசாலா தூள் – 1 ½ டீ.ஸ்பூன் (பொடி லிங்க் ஐ பார்க்கவும்)
சீரகம் – தாளிக்க



செய்முறை

உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து, கட் செய்து வைக்கவும்.

ஒரு கடாயில் 1 டே.ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சீரகம் தாளித்து, வெங்காயம் மிளகாய் போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும், பொடியாக நறுக்கிய வெந்தய கீரையை போட்டு வதக்கவும்.
பின் உப்பு, மஞ்சதூள், கறிமசாலா தூள் சேர்த்து ஒரு வதக்கு வதக்கி,



சிறிது தண்ணீர் தெளிக்கவும்.
பின் உருளைக்கிழங்கை சேர்த்து




மிதமான தனலில், பிரட்டி, மசாலா கிழங்கில் பிரண்டு வரும் வரை 5 நிமிடம் வறுக்கவும்.



இதை சப்பாத்தி, தயிர் சாதமுடன் பறிமாறலாம்.



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...