தேவையான பொருட்கள்
மட்டன் – ½ கிலோ
பெரிய வெங்காயம்- 1
சின்ன வெங்காயம் - 10
கறிவேப்பிலை, கொத்தமல்லி
உப்பு
பச்சை மிளகாய் – 2
மசாலா அரைக்க:
சிறிய வெங்காயம் – 1/2 கப்
இஞ்சி – சிறிது
பூண்டு – 6 பல்
கறிமசாலா பொடி – 1 மேஜை கரன்டி ( பொடி வகைகள் லிங்க்யை பார்க்கவும்)
செய்முறை:
சுத்தம் செய்த மட்டனை 1 ஸ்பூன் கறிமசாலா பொடி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 2 விசில் குக்கரில் விடவும்.மட்டன் அரை பதம் வேகும் வரை.
பின் ஒரு கடாயில் 1 மே.கரண்டி எண்ணெய் விட்டு சூடாக்கவும். அதில் சிறிய வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும். வதங்கியதும் அடுப்பை அணைத்து, மசாலா பொடியை போடவும். ஆறியதும் அரைத்து வைக்கவும்.
பின் ஒரு கடாயில், எண்ணை ஊற்றி, கடுகு தாளித்து, அதனுடன் நறுக்கிய ½ கப் சின்ன வெங்காயம் , ½
கப் பெரிய வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
விருப்பப்பட்டால் ½ டீ.ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது சேர்க்கவும்.
பின் மட்டனை சேர்க்கவும்.
பின் மசாலா விழுதை சேர்த்து வதக்கவும்.
பின் தேவையான தண்ணீர் சேர்த்து, மட்டன் வெந்து , நன்கு சுருண்டு வரும் வரை விட்டு, கொத்தமல்லி தூவி இறக்கவும்.
No comments:
Post a Comment