எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

சாக்கோ லாவா கேக்


தேவையான பொருட்கள்

சாக்கலேட் – 50  கிராம்
வெண்ணெய் – 50 கிராம்
ஐசிங்க் சர்க்கரை அல்லது சர்க்கரை தூள் – 40 கிராம்
முட்டை – 1

செல்ஃப் ரைசிங்க் ஃப்லார் (அல்லது மைதா + ¼ டீ.ஸ்பூன் பேக்கிங்க் சோடா) – 20 கிராம்

செய்முறை

முதலில் சாக்கலேட்டையும், வெண்ணெய்யையும் ஓவனில் 20 நொடி வைத்து எடுத்து கலக்கவும். உருகவில்லையென்றால் மீண்டும் 20 நொடி வைத்து , கலக்கவும்.


ஓவனை 180* c யில் ப்ரீ ஹீட் செய்யவும்.

முட்டையோடு சர்க்கரை சேர்த்து நன்கு முட்டை அடிப்பானால் அடிக்கவும்.

அதனோடு உருக்கிய சாக்கலேட்டையும், வெண்ணெயையும் சேர்க்கவும்.



பின் மைதாவையும் சேர்த்து கலக்கி,
மஃபின்ஸ் ட்ரேயில் வைத்த, பேப்பர் கப்பில் ¾ கப் ஊற்றவும்.
குறிப்பு:
இங்கு நான் கொடுக்கப்பட்டுள்ள அளவில், 3 கேக் செய்யலாம்.
அதிகமாக வேண்டும் என்றால், அளவுகளை இரண்டு மடங்காக சேர்க்கவும்.



பின் ஹீட் ஆன ஓவனில், 180* செ, 10 நிமிடம் மட்டும் வைத்து எடுக்கவும்.
லாவா கேக் தயார். கேக்கை வெட்டினால் சாக்கலேட் லாவா போல் வரும்.




பேப்பர் கப்களை மெதுவாக எடுத்து, பறிமாறவும்.









No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...