எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

புதினா சட்னி 2 / Mint Chutney






தேவையான பொருட்கள்

உளுந்து பருப்பு – 2 டே.ஸ்பூன்

கடலை பருப்பு – 1 டே.ஸ்பூன்
சிவப்பு மிளகாய் – 4
கறிவேப்பிலை
புதினா -1/2 கட்டு
தேங்காய் – ½ கப்
பூண்டு - 1 பல்
புளி – நெல்லிகனி அளவு  
எண்ணெய் , உப்பு

செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுந்து பருப்பு , கடலை பருப்பு ,சிவப்பு மிளகாய்,கறிவேப்பிலை, மிதமான சூட்டில்

 இவை அணைத்தையும் வதக்கவும்.






வதங்கியதும் புதினா சேர்த்து வதக்கவும்.
பின் தேங்காய் சேர்க்கவும்.
ஆறியதும் உப்பு , புளி வைத்து கெட்டியாக அரைக்கவும்.
தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.

இது இட்லி,தோசையுடன் பறிமாறலாம்.

இதே முறையில், புதினாவிற்கு பதில் கொத்தமல்லி தழையில் , முட்டை கோஸில் செய்யலாம்.

தோசை மற்றும் சப்பாத்தி மீது தடவி , சுருட்டி ரோலாக குழந்தைகளுக்கு பறிமாறலாம்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...