எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

சாம்பார் 2 / sambar





செய்முறை

குக்கரில் 1/2 கப் துவரம்பருப்பை ,1 தக்காளி , மஞ்சதூள் சேர்த்து , அளவான தண்ணீர் சேர்த்து  வேகவைக்கவும்.


 பின் தக்காளியை ரசத்திற்கு எடுத்து கொள்ளவும்.http://neelavinsamayalarai.blogspot.in/2013/10/blog-post_9121.html


பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, கடுகு கறிவேப்பிலை மிளகாய் தாளித்து,அதில் 1/2 கப் சின்ன வெங்காயம்,2 பச்சை மிளகாய்,  1 தக்காளி, 3 முருங்கைக்காய்  நறுக்கியது சேர்த்து வதக்கி, சிறிது உப்பு சேர்த்து மூடி மிதமான தனலில் வைக்கவும்.

காய் பாதி வெந்ததும், 


1 டீ.ஸ்பூன் சாம்பார் தூள் ( செய்முறை - இங்கே அழுத்தவும் ), பெருங்காயம், சேர்த்து, பருப்பில் கொட்டவும்.


2 டே.ஸ்பூன் தேங்காய் துருவல், கொத்தமல்லி , உப்பு, சேர்த்து காயை வேகவைக்கவும்.
காய் வெந்ததும்,  நெல்லிக்கனி அளவு புளியை கரைத்து, ஊற்றி, 5 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும்.

குறிப்பு:  முதலிலேயே புளி சேர்த்தால், காய் வேக நேரம் ஆகும்,    நீண்ட  நேரம் புளி கொதித்தால் புளியின் ருசி மாறிவிடும்.



  
இதே முறையில் முள்ளங்கி, வெண்டைக்காய், மேராக்காய், கேரட் பீன்ஸ் உருளை கலந்த காய்களிலும் செய்யலாம்.
































No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...