செய்முறை
2 உருளைக்கிழங்கை வேகவைத்து, மசித்து, தாளித்து வதக்கிய 1/2 கப் வெங்காயத்துடன் கலந்து, உப்பு, சேர்த்து வைக்கவும்.
பின் இதை 2 பகுதியாக பிரித்து, ஒரு பகுதியில் மஞ்சதூள் சேர்த்து, சிறிய உருண்டைகளாக பிடிக்கவும்.
வெள்ளை உருண்டையின் நடுவில் மஞ்சள் உருண்டையை வைத்து, முட்டை வடிவில் வைக்கவும்.
குறிப்பு: இதில் மஞ்சள் உருண்டைக்கு, மக்காசோளத்தை பயன்படுத்தலாம்.
பின் ரொட்டியின் ஓரங்களை வெட்டி, லேசாக தண்ணீரில் நணைத்து ,பிளிந்து, அதன் நடுவில் உருளை முட்டையை வைத்து மூடி , எண்ணெயில் பொறித்தெடுத்து, சாஸுடன் பறிமாறவும்.
குறிப்பு: கடைசியாக ரஸ்க் தூளில் பிரட்டி பொறித்தால், பொறிக்கும் பொழுது எண்ணெய் இழுக்காது, மொறு மொறுப்பாகவும் இருக்கும்.
No comments:
Post a Comment