செய்முறை
1 கப் உ.பருப்புடன், 1 டே.ஸ்பூன் அரிசியை ஊறவைக்கவும்.
பின் 1/4 கப் தண்ணீரை தெளித்து தெளித்து மாவு பந்து போல் வரும் வரை அரைக்கவும்.
பின் 1 டே.ஸ்பூன் சீரகமிளகு பொடித்தது, கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு சேர்த்து கலக்கி , உடனே செய்யவும்.
குறிப்பு: மாவு நீண்ட நேரம் வெளியே வைத்தால், நீர்த்து விடும்.
கையில் தண்ணீரை நணைத்து, மாவை உருட்டி, ஒரு ஓட்டை செய்து, எண்ணெயில் பொறித்தெடுக்கவும்.
தேங்காய் சட்னி, சாம்பாருடன் சுவையாக இருக்கும்.
மாவுடன் நறுக்கிய வெங்காயம்,பச்சைமிளகாய் சேர்க்கலாம்.
இதே வடையை சாம்பாரில், ரசத்தில், தயிரில் ஊறவைத்து பறிமாறலாம்.
அப்படி ஊறவைக்கும் முன், வடையை சுடுதண்ணீரில் முக்கி பிளிந்து, பின் சாம்பார், தயிரில் சேர்க்கலாம்.
No comments:
Post a Comment