எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

மசாலா மினி இட்லி



செய்முறை


40 மினி இட்லி என்றால், அதற்கு
2 பெரிய வெங்காயம், பச்சைமிளகாய் நறுக்கியதை தாளித்து, வதக்கவும்.

(குறிப்பு: வெங்காயம் வதக்கும் பொழுது சிறிது கேரட், பீன்ஸ், பட்டானி, குடைமிளகாய் சேர்த்து வதக்கலாம்.)

அதனுடன் பொடியாக நறுக்கிய 3 தக்காளி  (அ)   அரைத்த விழுதை சேர்த்து, உப்பு சேர்த்து வதக்கவும். வதங்கியதும் 





மஞ்சதூள், பெருங்காயதூள், சீரக தூள் - 1/4 டீ.ஸ்பூன்
மல்லி தூள், மிளகாய் தூள் - 1 டீ.ஸ்பூன்

சேர்த்து வதக்கி, சிறிது தண்ணீர் , உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
திரண்டு வந்ததும், கொத்தமல்லி தூவி




இட்லியை சேர்த்து பிரட்டி பறிமாறவும்.






No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...