செய்முறை
1 கப் ராகி மாவு, 1 கப் கோதுமை மாவு, உப்பு, சிறிது எண்ணெய் சேர்த்து கலந்து, பின் தேவையான தண்ணீர் சேர்த்து , பூரி மாவு பிசையவும்.
குறிப்பு: மிகவும் தளர்ச்சியாக இல்லாமல், மிக கெட்டியாக இல்லாமல் , மிருதுவாக பிசைந்து வைக்கவும்.
விருப்பப்பட்டால் மாவுடன் சிறிது சீரக தூள், மிளகாய் தூள் சேர்க்கலாம்.
பின் சிறு உருண்டைகளாக உருட்டி, சிறிது தடிமனாக தேய்த்து, எண்ணெயில் பொறித்தெடுக்கவும்.
குறிப்பு: பூரி செய்ய எண்ணெய் நன்கு காய வேண்டும், இல்லை பொந்திவராது.
ராகி சப்பாத்தி
செய்முறை
இதே முறையில் மாவை பிசையும் பொழுது, சிறிது தளர்ச்சியாக பிசைந்து, சிறிது நேரம் மாவை மூடி வைத்து, செய்யவும்
மெல்லியதாக தேய்த்து சுடவும்.
தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, குருமாவுடன் சுவையாக இருக்கும்.
No comments:
Post a Comment