எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

வென்னிலா ஐஸ்க்ரீம்



செய்முறை

 50 கிராம் சர்க்கரையுடன் 2 டீ.ஸ்பூன் சோளமாவை கலந்து வைக்கவும்.

 1 ஸ்பூன் ஜெலெடீனை சிறிது தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் ஊறவைக்கவும்.

பின்



ஒரு கனமான பாத்திரத்தில் 300 மில்லி பாலை காயவைத்து, அதில் சர்க்கரை கலவை, ஜெலெடின் சேர்த்து, மிதமான தனலில் பால் சிறிது கெட்டியாகும் வரை கிளறி, அடுப்பை அணைத்து, ஆறவிடவும்.

அதனுடன் 1 ஸ்பூன் வென்னிலா எஸன்ஸ் சேர்க்கவும்.

 1 கப் ஃப்ரெஷ்க்ரீமை ஃப்ரிஜில் வைத்தெடுத்து, முட்டை அடிப்பதில் நன்கு அடிக்கவும்.




க்ரீமை பால் கலவையுடன் மெதுவாக கலந்து, ஃப்ரீசரில் 1 மணி நேரம் வைத்து, எடுத்து , 
மீண்டும் ஒரு முறை முட்டை அடிப்பதில் நன்கு அடித்து, 6 மணி நேரம் ஃப்ரீசரில் வைத்து , பறிமாறவும்.

குறிப்பு:  ஃப்ரீசரை நல்ல குளிர்ச்சியில் செட் செய்ய வேண்டும்.

இது தான் பேசிக் ஐஸ்க்ரீம், வென்னிலா ஐஸ்க்ரீம்.










No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...