செய்முறை
முதலில் 2 நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு -6 பல் , இவற்றை எண்ணெய் ஊற்றி நன்றாக வதக்கவும்.
(அல்லது சின்ன
வெங்காயம் – 1 கப் உபயோகிக்கவும். மிக ருசியாக இருக்கும்.)
பின் அடுப்பை
அணைத்து, கறிமசாலா பொடி 2 டே.ஸ்பூன்
சேர்க்கவும். (பொடி லிங்க்கை பார்க்கவும்) , மஞ்சள்தூள் தேங்காய்துருவல்( 1/2 கப்), பொட்டுகடலை (1 ஸ்பூன்) சேர்க்கவும்.
ஆறியதும் விழுதாக
அரைத்து கொள்ளவும்.
பின் ஒரு கடாயில், எண்ணை ஊற்றி, கடுகு தாளித்து, அதனுடன் நறுக்கிய ½ கப் வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பின் நறுக்கிய தக்காளி (1) சேர்த்து வதக்கவும்.
பின் மசாலா விழுதை சேர்த்து வதக்கவும்.தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, உப்பு போட்டு மசாலா பச்சை வாசனை போகும் வரை கொதிக்க வைக்கவும்.
பின் பச்சை முட்டையை உடைத்து மெதுவாக ஊற்றி , கலக்காமல் விடவும். அடுப்பை சிம்மில் வைத்து முட்டை வேகும் வரை விட்டு, கொத்தமல்லி தூவி பறிமாறவும்.
தோசை, சப்பாத்தியுடன் சுவையாக இருக்கும்.
No comments:
Post a Comment