எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

புதினா சட்னி / Mint Chutney






தேவையான பொருட்கள்

உளுந்து பருப்பு – 2 டே.ஸ்பூன்
கடலை பருப்பு – 1 டே.ஸ்பூன்
பெரிய வெங்காயம்- 2
பச்சை மிளகாய் – 2
சிவப்பு மிளகாய் – 2
கறிவேப்பிலை , இஞ்சி , பூண்டு – சிறிதளவு
 தக்காளி - 1
புதினா -1 கட்டு
தேங்காய் – ½ கப்
புளி – நெல்லிகனி அளவு  
எண்ணெய் , உப்பு

செய்முறை

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுந்து பருப்பு , கடலை பருப்பு ,பெரிய வெங்காயம்
பச்சை மிளகாய் , சிவப்பு மிளகாய்
கறிவேப்பிலை , இஞ்சி , பூண்டு , தக்காளியை இதனுடன் முழுதாக போடவும். இவை அணைத்தையும் வதக்கவும்.





வதங்கியதும் புதினா சேர்த்து வதக்கவும்.
பின் தேங்காய்,உப்பு , புளி சேர்க்கவும்.
ஆறியதும் கெட்டியாக அரைக்கவும்.

இது சாதத்துடன் பறிமாறலாம். 
தோசை மற்றும் சப்பாத்தி மீது தடவி , சுருட்டி ரோலாக குழந்தைகளுக்கு பறிமாறலாம்.

கொஞ்சம் தண்ணீர் சேர்த்தால் இட்லி மற்றும் தோசையுடன் பறிமாறலாம்.
இதே முறையில் கொத்தமல்லி தழையில் செய்யலாம். புதினா,கொத்தமல்லி இரண்டும் சேர்த்தும் செய்யலாம்.



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...