எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

பூ ஆப்பம்



செய்முறை


புழுங்கரிசி -1 கப்
பச்சரிசி – 1 கப்
உளுந்து – ¼ கப்
இவை மூன்றையும் நன்கு ஊறவைத்து, அதனுடன் ½ கப் சாதம், ½ கப் துருவிய தேங்காய் சேர்த்து , நன்றாக தோசைமாவு பதத்திற்கு அரைத்து,
உப்பு சேர்த்து, புளிக்க விடவும்.



ஆப்பம் சுடுவதற்க்கு முன், 1 துளி சோடா உப்பை தண்ணீரில் கரைத்து, மாவோடு கலக்கி வைக்கவும்.



பின் ஆப்ப கடாயை சூடு செய்து, அதில் 1 கரண்டி மாவை ஊற்றி,
மாவை மேலே-கீழே-இடது-வலது என்ற முறையில் சுழற்றி, சிறிது எண்ணெய் விட்டு மூடி, மிதமான தனலில் வேகவைத்து எடுத்து பறிமாறவும்.


மாவை நடுவில் குத்தினால், கரண்டியில் ஒட்டாமல் வரும், அப்பொழுது எடுத்து விடவும்.




No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...