செய்முறை
1/4 கப் தட்டபயிரை வேகவைத்து வைக்கவும்.
1 கட்டு சிறுகீரை அல்லது முளைக்கீரையை சுத்தம் செய்து நறுக்கி வைக்கவும்.
1/2 கப் தேங்காயுடன் பச்சைமிளகாய், சீரகம் (1/2 டீ.ஸ்பூன்) சேர்த்து அரைத்து வைக்கவும்.
ஒரு கடாயில் கடுகு, கறிவேப்பிலை ,மிளகாய் தாளித்து, சிறிது வெங்காயம் சேர்த்து வதக்கி, அதனுடன் கீரையை சேர்த்து லேசாக வதக்கவும்.
பின் வேகவைத்த பயிர், தேங்காய் விழுது, உப்பு சேர்த்து கூட்டு கெட்டி ஆகும் வரை, மிதமான தனலில் மூடி வைக்கவும்.
சாதம், தோசை, சப்பாத்தியுடன் பறிமாறலாம்.
No comments:
Post a Comment