செய்முறை
ஒரு கடாயில் 2 டே.ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு, கடுகு ,வெந்தயம்,கறிவேப்பிலை,காய்ந்த மிளகாய், தாளித்து,
அதனுடன் 1/2 கப் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பின் 1/4 கப் சுக்கடி காயை சேர்த்து வதக்கி, 1 தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் மஞ்சதூள் (1/4 டீ.ஸ்பூன்), சாம்பார் தூள் (1 டீ.ஸ்பூன்), தனியாதூள் (1 டீ.ஸ்பூன்) சேர்த்து வதக்கி, நெல்லிகனி அளவு புளியை கரைத்து சேர்க்கவும்.
உப்பு சேர்த்து மிதமான தனலில் குழம்பு கெட்டி ஆகும் வரை விடவும்.
No comments:
Post a Comment