எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

நெத்திலி தொக்கு



செய்முறை





1/2 கிலோ நெத்திலி மீனை சுத்தம் செய்து, அதில் சிறிது உப்பு, மஞ்சதூள், மிளகாய் தூள் சேர்த்து சிறிது நேரம் வைக்கவும்.




ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு கறிவேப்பிலை தாளித்து, பச்சை மிளகாய், 1/2 கப் நறுக்கிய சின்ன வெங்காயம், 1/2 கப் பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

வெங்காயம் வதங்கியவுடன் 1/2 ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது, 2 ஸ்பூன் மிளகாய் தூள், 2 ஸ்பூன் மல்லி தூள், மஞ்சதூள் சேர்த்து வதக்கியவுடன், 1 தக்காளி சேர்த்து ,உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பின் தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு பச்சை வாசனை இல்லாமல் , சுருண்டு வரும் வரை விடவும்.


பின் மீனையும், 1/4 கப் தேங்காய் பாலையும் சேர்த்து, மீன் உடையாமல் கிளறவும்.




மீன்  2 நிமிடத்தில் வெந்து விடும். கொத்தமல்லி தூவி இறக்கவும்.





No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...