எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

ப்லேக்கரண்ட் ஐஸ்க்ரீம் / Blackcurrant icecream




செய்முறை


50 கிராம் கருப்பு உலர் திராச்சையை சிறிது சுடு நீரில் ஊறவைத்து, பாதியை அரைக்கவும், பாதியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

பிறகு


 50 கிராம் சர்க்கரையுடன் 2 டீ.ஸ்பூன் சோளமாவை கலந்து வைக்கவும்.

 1 ஸ்பூன் ஜெலெடீனை சிறிது தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் ஊறவைக்கவும்.

பின்



ஒரு கனமான பாத்திரத்தில் 300 மில்லி பாலை காயவைத்து, அதில் சர்க்கரை கலவை, ஜெலெடின் சேர்த்து, மிதமான தனலில் பால் சிறிது கெட்டியாகும் வரை கிளறி, அடுப்பை அணைத்து, ஆறவிடவும்.

ஆறிய பாலில், அரைத்த திராச்சையை மற்றும் 1 துளி திராச்சை எஸன்ஸ் சேர்த்து, 


( 1 கப் ஃப்ரெஷ்க்ரீமை ஃப்ரிஜில் வைத்தெடுத்து, முட்டை அடிப்பதில் நன்கு அடிக்கவும்.  பின் அதை ஃப்ரீசரில் வைக்கவும்.)

க்ரீமை பால் கலவையுடன் மெதுவாக கலந்து, 


ஃப்ரீசரில் 1 மணி நேரம் வைத்து எடுத்து , 



மீண்டும் ஒரு முறை முட்டை அடிப்பதில் நன்கு அடித்து, மீதி பாதி நறுக்கிய திராச்சை சேர்த்து,  6 மணி நேரம் ஃப்ரீசரில் வைத்து , பறிமாறவும்.


குறிப்பு:  ஃப்ரீசரை நல்ல குளிர்ச்சியில் செட் செய்ய வேண்டும்.









No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...