செய்முறை
நெத்திலி மீனை சுத்தம் செய்யவும்.
பிறகு
1/2 கிலோ மீனுக்கு, ( 1 ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது, 1/4 ஸ்பூன் மஞ்சதூள், 2 ஸ்பூன் மிளகாய் தூள், 1/2 ஸ்பூன் மிளகு தூள், 1/2 எலுமிச்சை பழ சாறு, 1 ஸ்பூன் அரிசிமாவு, உப்பு) கலந்து மீனில் தடவி, ஊறவைத்து பொறிக்கவும்.
பின் ஒரு கடாயில், எண்ணெய் ஊற்றி, கறிவேப்பிலை மிளகாய் தாளித்து, வெங்காயம் வதக்கி, அதனுடன் சிறிது
மஞ்சதூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து பிரட்டி, பொறித்த மீனை சேர்த்து உடையாமல் கலக்கி பறிமாறவும்.
இது சாம்பார் சாதம், தாளித்த சாதம், ரசம், தயிர் சாதங்களுடன் சுவையாக இருக்கும்.
No comments:
Post a Comment