செய்முறை
1/2 காலிஃப்லவரை சுத்தம் செய்யவும்.
1 பெரிய உருளைக்கிழங்கை நறுக்கி வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய்விட்டு, அதில் காய்களை போட்டு, அதனுடன் சிறிது மஞ்சதூள், மிளகாய்தூள்,உப்பு சேர்த்து, வதக்கி, மூடி வேகவைக்கவும்.
குறிப்பு: காய்களை எண்ணெயில் பொறித்தும் வைக்கலாம்.
1 கப் வெங்காயத்தை எண்ணெய் விட்டு வதக்கி, 3 ஸ்பூன் கறிமசாலா பொடி (பொடி லிங்கை பார்க்கவும்) சேர்த்து விழுதாக அரைக்கவும்.
பின் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, சீரகம் தாளித்து, 1/2 கப் வெங்காயம் சேர்த்து வதக்கி, 1/2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் 1/4 கப் தக்காளியுடன் உப்பு சேர்த்து நன்கு வதக்கி, அதனுடன் அரைத்த மசாலாவை கலந்து, வேகவைத்த காய்களை சேர்த்து,
சிறிது தயிர், கசூரிமேத்தி சேர்த்து, உப்பு மற்றும்,
சிறிது தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் , மிதமான தனலில் மூடி வைத்து ,அடுப்பை அணைக்கவும்.
கொத்தமல்லி தூவி பறிமாறவும்.
சப்பாத்தி, ரோட்டி, புலாவ், ஆப்பம், தோசையுடன் சுவையாக இருக்கும்.
No comments:
Post a Comment