எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

காலிஃபலவர் ஆப்பம்



செய்முறை


புழுங்கரிசி -1 கப்
பச்சரிசி – 1 கப்
உளுந்து – ¼ கப்
இவை மூன்றையும் நன்கு ஊறவைத்து, அதனுடன் ½ கப் சாதம், ½ கப் துருவிய தேங்காய் சேர்த்து , நன்றாக தோசைமாவு பதத்திற்கு அரைத்து,
உப்பு சேர்த்து, புளிக்க விடவும்.



ஆப்பம் சுடுவதற்க்கு முன், 1 துளி சோடா உப்பை தண்ணீரில் கரைத்து, மாவோடு கலக்கி வைக்கவும்.



காலிஃப்லவர் செய்ய:

1/2 கப் நறுக்கிய வெங்காயம், 1 கப் மிக பொடியாக நறுக்கிய காலிஃப்லவர், மேகி பொடி, கொத்தமல்லி, மஞ்சதூள், உப்பு

மிளகாய் தூள் -தேவையான அளவு (குழந்தைகள் சாப்பிடுவதற்கு ஏற்ப)




ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, அதில் வெங்காயத்தை வதக்கி, பின் காலிஃப்லவரை வதக்கவும், பின் தூள்களை சேர்த்து வதக்கி, உப்பு சேர்த்து , நீர் தெளித்து காயை வேகவைக்கவும்.
கொத்தமல்லி தூவி ஆறவிடவும்.


பின்  2 ஆப்பத்திற்கு , 2 முட்டை + 2 டே.ஸ்பூன் காய் கலவை + 1 துளி உப்பு சேர்த்து கலக்கவும்.


பின் 


ஆப்பக்கடாயில் 1 கரண்டி மாவை ஊற்றி சுழற்றி விட்டு, பின் அதில் முட்டை கலவையை ஊற்றி சுழற்றி,

சிறிது எண்ணை விட்டு மூடி, வேக விடவும்.







No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...