எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

கார்ன்ஃப்லார் உலர் பழ அல்வா



செய்முறை




1/2 கப் (100 கி) சோளமாவு,  250 கி சர்க்கரை, சிறிது கலர், 2 கப் (400 மி.லி) தண்ணீர் சேர்த்து கலக்கி, ஒரு மைக்ரோ சேஃப் பாத்திரத்தில்  , ஓவனில் 4 நிமிடம் வைக்கவும்.



பின் அதைக் கலக்கி, அதனுடன் 1 கப் நறுக்கிய ( பேரிச்சை பழம், முந்திரி, பாதாம், கசகசா) , 2 டே.ஸ்பூன் நெய், 1/4 டீ.ஸ்பூன் ஏலக்காய் தூள்  சேர்த்து கலக்கி, 6 முதல் 8 நிமிடம் வரை ஓவனில் வைக்கவும்.

நடுவில் 2 முறை எடுத்து கலக்கி வைக்கவும்.


 அல்வா பதம் வந்ததும், நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறியதும் வெட்டி வைக்கவும்.



சோளமாவு அல்வா

ஓவன் இல்லாதவர்கள், அடுப்பிலேயே எளிதில் செய்ய:

1.  100 கி மாவு + கலர் + 1 3/4 கப் தண்ணீர் = கரைத்து வைக்கவும்.
2. 250 கி சர்க்கரை +  1/4 கப் தண்ணீர் = பாகு செய்யவும்.
3. பாகில் மாவு கரைசலை சேர்த்து மிதமான தனலில் கை விடாமல் கலக்கவும். சீக்கிரம் பதம் வந்து விடும்.
4. உலர் பழங்கள், நெய், ஏலக்காய் சேர்த்து கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறவிட்டு, வெட்டவும்





No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...