பாஸ்மதி சாதம்
முதலில் 1 கப் பாஸ்மதி அரிசியை கழுவி, 2 கப் தண்ணீரில் 15 நிமிடம் ஊறவைக்கவும். பின் அதில் 1 ஸ்பூன் ஆயில் மற்றும் சாதத்திற்கு தேவையான உப்பு சேர்த்து, 1 விசில் விட்டு, சாதத்தை ஆற வைக்கவும்.
ஒரு கடாயில் 3 டே.ஸ்பூன் ஆயில் ஊற்றி, அதில் பொடி செய்த 5 பல் பூண்டை போட்டு வதக்கவும்.
பின் பொடி செய்த 100 கி சிக்கனை சேர்த்து மிதமான தனலில் வைத்து, சிக்கன் வேகும் வரை வதக்கவும்.
பின் 1/2 கப் மிக பொடியாக நறுக்கிய வெங்காயம்,கேரட், குடைமிளகாய் சேர்த்து, சிறிது அஜினோ மோட்டோ தூவி வதக்கவும், வதங்கியதும் , காயை ஒதுக்கி நடுவில் குழி செய்து , 1 ஸ்பூன் ஆயில் விட்டு
அதில் உப்பு,மிளகு தூள் சேர்த்து அடித்து வைத்த 2 முட்டையை ஊற்றி வறுக்கவும்.
முட்டை வறுபட்டதும் 2 டீ.ஸ்பூன் வரமிளகாய் விழுது, 1 ஸ்பூன் சோயா சாஸ், சிறிது சர்க்கரை, சேர்த்து பிரட்டி,
சாதம் மற்றும் வெங்காய தாள் சேர்த்து பிரட்டி , சூடாக பறிமாறவும்.
|
No comments:
Post a Comment