எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

ஹாட் & சார் சிக்கன் சூப் (HOT AND SOUR CHICKEN SOUP)



செய்முறை

சிக்கனை எலும்புடன் 2 கப் தண்ணீர் விட்டு குக்கரில், 3 விசில் விட்டு, தண்ணீரை வடிக்கவும்.

பின் மிக பொடியாக நறுக்கிய 2 டே.ஸ்பூன்  வேகவைத்த சிக்கன், 1 ஸ்பூன் கேரட் மற்றும் கோஸ் எடுத்து கொள்ளவும்.


1 கப்பில் ( 1 ஸ்பூன் கார்ன் ஃப்லார், உப்பு, சிறிது சர்க்கரை, 1/2  டீ.ஸ்பூன் மிளகு தூள், 2 ஸ்பூன் சோயாசாஸ் சேர்த்து கலக்கி வைக்கவும்.
1 முட்டையை அடித்து வைக்கவும்.




பின்

ஒரு பாத்திரத்தில் சிக்கன் வடித்த தண்ணீரை ஊற்றி , கொதி வரும் பொழுது சிக்கன் மற்றும் காய்களை சேர்க்கவும்.


1 நிமிடம் கழித்து  சாஸ் கலவை சேர்த்து , 1 டே.ஸ்பூன் முட்டையை துளி துளியாக சூப்பில் விடவும்.
1 ஸ்பூன் ஆயில் சேர்க்கவும். (பளபளக்க)




சூப் பதம் வந்ததும், (மொத்தமாக 3 - 5 நிமிடதில் தயாராகி விடும்)
அடுப்பை அணைத்து வெங்காய தாள் தூவி சூடாக பறிமாறவும்.




No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...