செய்முறை
1 வாழைத்தண்டை சுத்தம் செய்து நறுக்கவும், இதனுடன் 1/4 கப் தேங்காய் சேர்த்து அரைத்து வடிகட்டி பால் எடுக்கவும்.
(விருப்பப்பட்டால் இதனுடன் இஞ்சிபூண்டு பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து பால் எடுக்கலாம்.)
1 கப் பாஸ்மதி அரிசியை 2 கப் தண்டு பாலில் 15 நிமிடம் ஊறவைத்து, சிறிது உப்பு சேர்த்து குக்கரில் 1 விசில் விடவும்.
பின்
ஒரு கடாயில் 1 கரண்டி எண்ணெய் விட்டு பட்டை லவங்கம்,பி.இலை, ஏலக்காய் தாளித்து, 1 வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக வந்ததும், 1 கப் வெந்த அமெரிக்க கார்னை சேர்த்து வதக்கி,சாதத்தை சேர்க்கவும்.
அடுப்பை அணைத்து, மிளகு தூள், கொத்தமல்லி தூவி கலக்கி பறிமாறவும்.
No comments:
Post a Comment