செய்முறை
சிக்கனை எலும்பு இல்லாமல் நறுக்கி, மிக்ஸியில் அடிக்கவும்.
பின் அதனுடன் நறுக்கிய பூண்டு, தேவையான அளவு மிளகாய் தூள், மிளகு தூள், உப்பு, கரம்மசாலா தூள் கொத்தமல்லி தழை சேர்த்து பிசைந்து சிறிது நேரம் வைக்கவும்.
பிறகு அதை உருட்டி, தட்டி, மைதா மாவில் பிரட்டி
பின் முட்டையில் முக்கி எடுத்து, ரஸ்க் தூளில் ( நான் இங்கு கார்ன் ஃப்லேக்ஸ்யை பொடி செய்து பிரட்டினேன்)
பின் தவாவில் சிறிது எண்ணெய் விட்டு, மிதமான தனலில் இரு புறமும் வேகவைக்கவும்.
பின்
பர்கர் பன்னில் கீழ் பகுதியில் மயோனைஸ் தடவி, லெட்யூஸ் தழை வைத்து, பேட்டியை வைக்கவும்.
பின் அதன் மேல் சீஸை வைத்து, வெங்காயம் தக்காளி வைத்து , மேல் பன்னை வைத்து பறிமாறவும்.
பேட்டியின் சூட்டிற்கு சீஸ் உருகி, சுவையாக இருக்கும்.
முறை -2
சிக்கன் ப்ரெஸ்ட் சிறிது இஞ்சிபூண்டு விழுது,மிளகாய்தூள், உப்பு, மிளகு தூள், எலுமிச்சை சாறு சேர்த்து பிரட்டி ஊறவைக்கவும்.
பின் மாவில் பிரட்டி, முட்டையில் பிரட்டி, கார்ன் தூளில் பிரட்டி , தவாவில் மேல் கூறியது போல் வேகவைத்து பர்கரில் வைக்கவும்.
முறை -3
ஊறவைத்த சிக்கனை முட்டையில் பிரட்டி, பின் மாவு கார்ன்தூள் கலவையில் பிரட்டி மேல் கூறியவாறு செய்யவும்.
No comments:
Post a Comment