செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய 1/2 கப் கேரட், வெங்காயம் மற்றும் வெங்காய தாள் சேர்த்து வதக்கவும்.
பீன்ஸ், கார்ன் கூட சேர்க்கலாம்.
வதங்கியதும் தேவையான அளவு மிளகாய் தூள், உப்பு, கரம்மசாலா தூள் சேர்த்து பிரட்டி, அடுப்பை அணைத்து, வேகவைத்து தோல் உரித்த 1 பெரிய உருளை கிழங்கை சேர்த்து மசித்து, உருட்டவும்.
பின் 2 ஸ்பூன் மைதாவை தண்ணியாக கரைத்து, கட்லட்டை அதில் பிரட்டி, பின் ரஸ்க்தூளில் பிரட்டவும் ( இங்கு நான் கார்ன் ஃப்லேக்ஸ் பொடி செய்து பிரட்டினேன் )
பின் தவாவில் சிறிது எண்ணெய் விட்டு, பொறித்து எடுக்கவும்.
No comments:
Post a Comment