செய்முறை
மைதா மாவிற்கு பதில் நான் இங்கு (மல்டி க்ரெயின்) கோதுமை மாவு உபயோகித்து உள்ளேன்.
1 கப் மாவுடன் உப்பு, சிறிது நெய் சேர்த்து பிசறி, தண்ணீர் சேர்த்து மிருதுவாக பிசையவும்.
மாவு ஊறும் சமயத்தில்
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, 1 ஸ்பூன் நறுக்கிய பூண்டு,பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காய தாளிள் வெங்காயம் , கேரட், கோஸ் தலா 1/4 கப் சேர்த்து லேசாக வதக்கி, உப்பு , சோயாசாஸ் (1 ஸ்பூன் ) வெங்காய தாள் சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
ஆறவிடவும்.
பின் பூரிக்கு போல் மாவை சிறியதாக உருட்டி, மெலிதாக திரட்டவும்.
மேலே படங்களில் உள்ளது போல் திரட்டிய மாவில், சீஸை வைத்து, காயை வைத்து, இரு புறமும் மடக்கி , பின் உருட்டி, தண்ணீரை தொட்டு, முனையை ஒட்டவும்.
பின் மிதமான காய்ச்சலில், எண்ணெயில் பொறுமையாக மொறுமொறுப்பாக பொறித்தெடுத்து, சாஸ் உடன் பறிமாறவும்.
No comments:
Post a Comment