எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

சோள வான்டன்ஸ் (SWEETCORN WONTONS)



செய்முறை

மைதா மாவு - 1 கப்
சோளமாவு ( கார்ன் ஃப்லார்) - 1/2 கப்
உப்பு
சோடா உப்பு - 1 துளி
சில்லான தண்ணீர்


இவை அணைத்தையும் சேர்த்து  மிருதுவாக பிசைந்து வைக்கவும்.


பின் அமேரிக்க சோளம் - 1 (வேகவைத்து உதிர்க்கவும்)


ஒரு கடாயில்  2 ஸ்பூன் எண்ணெய் விட்டு,  1 ஸ்பூன் மிக பொடியாக நறுக்கிய பூண்டு , 1 பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கி, பின் அதில் சோளம், உப்பு, 1 ஸ்பூன் சோயா சாஸ், 2 ஸ்பூன் தக்காளி சாஸ்  சேர்த்து கலக்கி, அடுப்பை அணைத்து ஆறவிடவும்.
விருப்பப்பட்டால் மிளகாய் விழுது சேர்க்கலாம்.

பின்





மாவை உருட்டி, சப்பாத்திக்கு போல் திரட்டி, சதுரமாக வெட்டி,
1 ஸ்பூன் சோள கலவையை  படத்தில் உள்ளவாறு வைத்து, உருட்டி, இரு முனைகளையும் படத்தில் உள்ளவாறு கீழே கொண்டு வந்து , தண்ணீர் தொட்டு ஒட்டவும். 


பின் எண்ணெயை மிதமான சூட்டில் வைத்து, பொறித்தெடுக்கவும்.
சூடு அதிகமாய் இருந்தால், சிவந்து விடும் , மொறுமொறுப்பாகாது.








No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...