எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

கோதுமை அல்வா



செய்முறை

சம்பா கோதுமையை 8 மணி நேரம் ஊறவைத்து, தண்ணீரை வடித்து, கோதுமையை ஆட்டவும்.
பின் சிறிது தண்ணீர் சேர்த்து கலக்கி , வடிகட்டி பால் எடுக்கவும்.







பாலில் இருந்து நீர்  நன்கு தெளியும் வரை மூடி வைக்கவும்.


பின் நீரை வடித்து, பாலை அளவு பார்க்கவும்.

கோதுமை பால் 1 கப் என்றால் சர்க்கரை 1 கப், நெய் 1/2 கப்,
ஏலக்காய் தூள் - 1/2 டீ.ஸ்பூன் , கலர் சிறிது


ஒரு அடிகனமான கடாயில், சர்க்கரை சேர்த்து, சர்க்கரை மூழ்கும் வரை நீர் சேர்த்து, 1 கம்பி பதம் பாகு வரும் வரை விட்டு,
கோதுமை பாலை ஊற்றி கை விடாமல் கிளறவும். சிறிது கலர் சேர்க்கவும்.




பால் கெட்டி ஆனதும், பாதி நெய்யை சேர்த்து நன்கு கிளறி, நெய் உள் வாங்கியதும், மீதி நெய்யை ஊற்றி, அல்வா கையில் ஒட்டாமல் வரும் வரை கிளறவும்.



பின் ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி, ஒரு தட்டில் கொட்டி, சமமாக செய்து, ஆறியதும், துண்டுகள் போட்டு பறிமாறவும்.

சுவையான அல்வா ரெடி.








No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...