எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

ஆலூ மட்டர்



செய்முறை

1 கப் வெங்காயம், 1 டீ.ஸ்பூன் சீரகம் , சோம்பு ;  4 காய்ந்த மிளகாய், 6 பல் இஞ்சி பூண்டு, 2 கிராம் பட்டை, சிறிது மிளகுடன் எண்ணெய் சேர்த்து வதக்கி, பின் 1 தக்காளி சேர்த்து லேசாக வதக்கி, அடுப்பை அணைத்து, 2 ஸ்பூன் மல்லிதூள் சேர்த்து, ஆறவிட்டு அரைக்கவும்.
விருப்பப்பட்டால் 4 முந்திரி சேர்த்து அரைக்கவும்.




ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பட்டை ஏலக்காய் தாளித்து, அரைத்த விழுதை உப்பு சேர்த்து வதக்கவும்.


விழுது வதங்கியதும், 1/4 கப் தக்காளி (விதை இல்லாமல்), கொத்தமல்லி, கசூரி மேத்தி சேர்த்து, அதனுடன் வேகவைத்த 1 கப் உருளைக்கிழங்கு பட்டானியை சேர்த்து, காய் வேகவைத்த நீரை சேர்த்து, உப்பு போட்டு  2 நிமிடம் சிம்மரில் வைத்து மூடி வைத்து இறக்கவும்.



கொத்தமல்லி தூவி பறிமாறவும்.






No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...