எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

கோபி மசாலா



செய்முறை

 பொடியாக நறுக்கிய
1 கப் வெங்காயம்
1/2 கப் தக்காளி, கறிவேப்பிலை சிறிது
பட்டை, கிராம், ஏலக்காய், பி.இலை, சீரகம் - தாளிக்க
பச்சை மிளகாய் - 2
தயாராக வைக்கவும்.


ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, பட்டை,..... தாளித்து, வெங்காயம் மிளகாய் சேர்த்து லேசாக வதக்கி, 1 ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

பின் மஞ்சதூள்,  1 ஸ்பூன் மிளகாய் தூள், 1/4 ஸ்பூன் சீரக தூள், 2 ஸ்பூன் மல்லி தூள், 1/2 ஸ்பூன் ஆச்சி சிக்கன் மசாலா தூள் சேர்த்து, வதக்கி



சுத்தம் செய்த  1 கப் காலிப்பூ, பட்டானி, தக்காளி சேர்த்து, உப்பு போட்டு, கிளறி, மூடி காயை பாதி வேக்காடு விடவும்.
பின் 1/2 கப் தேங்காயுடன் 1 ஸ்பூன் சோம்பு சேர்த்து அரைத்த விழுதை சேர்க்கவும்.


தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து கொத்தமல்லி தூவி மூடி,  காயை வேகவைக்கவும்.






No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...