செய்முறை
1 கப் தயிரை உடைத்து தண்ணீர் கலந்து அடித்து, வடிகட்டவும்.
பின் ஒரு கப்பில்
கடலைமாவு - 1 மேஜைக்கரண்டி
உப்பு
சர்க்கரை - 1 டீ.ஸ்பூன்
பெருங்காயம்
மஞ்சதூள்
சேர்த்து கலந்து , மோரை கலக்கவும்.
பின் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு சீரகம் தாளித்து, கறிவேப்பிலை, 3 பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, மிதமான தனலில் வைத்து மோரை ஊற்றவும்.
பொங்கி வரும் பொழுது கலக்கி விட்டு, கொத்தமல்லி தூவி, மூடி , மிதமான தனலில், கடலை மாவின் பச்சை வாசனை போகும் வரை விட்டு, அடுப்பை அணைக்கவும்.
இதை சாதம், சப்பாத்தி, தோசையுடன் சுவையாக இருக்கும்.
இதனுள் வடையை போட்டு ஊறவைத்து, பகோடா கடி என்று பறிமாறலாம்.
No comments:
Post a Comment