எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

நாட்டு கோழி ப்ரியாணி / Chicken briyani



செய்முறை

250 கிராம் நாட்டு கோழியுடன் 1 ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது, மஞ்சதூள், 1/2 ஸ்பூன் மிளகாய் மற்றும் கரம்மசாலா தூள், 1 மேஜைக்கரண்டி தயிர், உப்பு, புதினா, கொத்தமல்லி  சேர்த்து பிரட்டி, 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.

இஞ்சிபூண்டு- 8 பல் தலா
பட்டை, லவங்கம் - 2
ஏலக்காய் - 1
சோம்பு, கசகசா - 1 ஸ்பூன்
1/2 தக்காளி
3 வரமிளகாய்
இவற்றை விழுதாக அரைக்கவும்.

1 கப் (200 கிராம் ) ப்ரியாணி அரிசியை கழுவி , 2 கப் தண்ணீரில் ஊறவைக்கவும்.


1 வெங்காயம் நறுக்கி வைக்கவும்
புதினா, கொத்தமல்லி
1/2 எலுமிச்சை பழம்
பட்டை, லவங்கம், பி.இலை - 2
ஏலக்காய்-1

பின் ஒரு குக்கரில் 1 குழிகரண்டி எண்ணெய் விட்டு, பட்டை,......தாளித்து, அரைத்த விழுதை சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் வெங்காயம், புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கி, ஊறிய சிக்கனை சேர்த்து வதக்கி, மூடி, 1 விசில் விடவும்.
                            

பின் ஊறிய அரிசியை, அதே தண்ணீருடன், சேர்த்து, உப்பு, எலுமிச்சை சாறு,  சேர்த்து 1 விசில் ஹய்யிலும், சிம்மில் 2 நிமிடம் வைத்து அடுப்பை அணைக்கவும்.
                            
 











1 comment:

  1. வணக்கம்...

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : ராஜி அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காணாமல் போன கனவுகள்

    வலைச்சர தள இணைப்பு : கல்யாணம் ஆகாதவர்களுக்கான பதிவு!

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...