செய்முறை
250 கிராம் வெண்டக்காயை சுத்தம் செய்து, ஈரம் இல்லாமல் பொடியாக நறுக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, காயில் சிறிது தயிர் சேர்த்து வதக்கவும்.
( தயிர் சேர்ப்பதால் வழுவழுப்பு சீக்கிரமாக போகி விடும்)
பின் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு கறிவேப்பிலை தாளித்து, 1 வெங்காயம், 2 பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி, 1/2 ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் 1 ஸ்பூன் சாம்பார் பொடி, மஞ்சதூள் சேர்த்து, 1 தக்காளி நறுக்கியதை சேர்த்து லேசாக வதக்கி, ( மேலே ) வதக்கிய காயை சேர்த்து பிரட்டி, உப்பு சேர்த்து மூடி வேகவைக்கவும்.
தக்காளி நீரில் காய் வெந்து விடும்.
பின் தேங்காய் துருவல் ( அல்லது விழுதாகவோ ) சேர்த்து , கலந்து
சூடான சாதம், சப்பாத்தி, கலவை சாத வகைகள், ரொட்டியுடன் பறிமாறலாம்.
No comments:
Post a Comment