எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

சாக்கலேட் ட்ரஃபில் மஃபின்ஸ்



செய்முறை

ஓவனை ப்ரீ-ஹீட் செய்யவும்.

200 கி மைதா + 1 ஸ்பூன் பேக்கிங் பொடி ( 3 முறை சலிக்கவும்)

 150 கி சர்க்கரை (பொடித்தது), 100 கி வெண்ணெய், 4 முட்டை, எசன்ஸ் தயாராக வைக்கவும்.

முதலில் வெண்ணெயை  நன்கு அடித்து, சர்க்கரை தூள் சேர்த்து நன்கு அடிக்கவும்.



பின் முட்டையை சேர்த்து அடித்து, எசன்ஸ் சேர்க்கவும்.


பின் மாவை சேர்த்து மெதுவாக ஒரே பக்கமாக கலந்து , தேவைப்பட்டால் சிறிது பால் சேர்க்கவும், மாவை எடுத்து விட்டால் ரிப்பன் போல் விழும்.


தயார் செய்ததை கப்பில் 3/4 வரை ஊற்றி, அதன் தட்டில் வைத்து 180*செ, 15  நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.


ஆறியதும்....


சாக்கலேட் டாப்பிங்  செய்ய:

1 கப் சாக்கோ சிப்ஸ் உடன் 1/2 கப் ஃப்ரெஸ் க்ரீம் சேர்த்து, மிதமான தனலில் சூடு செய்து, 


உருகியதும் கப் கேக் மேல் பரவலாக ஊற்றி உடனே பறிமாறவும்.


இதை ஃப்ரிஜில் வைத்தும் பறிமாறலாம், அந்த சமயத்தில் வெண்ணெய்க்கு பதில் எண்ணெய் சேர்த்து கேக் செய்யவும்.







No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...