எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

பலா கேசரி


செய்முறை


3 டே.ஸ்பூன் நெய் + 2 ஸ்பூன் ஆயில்  சூடானதும், முந்திரியை சேர்த்து லேசாக சிவக்கும் பொழுது, உலர் திராச்சை, 2 கிராம்பு, நறுக்கிய பாதாம் சேர்க்கவும்.
பின் 1/2 கப் நறுக்கிய பலா சேர்த்து நன்கு வதக்கி , 2 கப் நீர் விட்டு , மூடி கொதிக்க  விடவும்.
( இதனால் பலாவின் சுவை நீரில் இறங்கும்)




நீர் கொதித்ததும் 1 கப் வறுத்த வெள்ளை ரவை தூவினாற் போல் சேர்த்து கிளறி, 1/4 ஸ்பூன் ஏலக்காய் தூள் சேர்க்கவும்.



ரவை வெந்ததும், 1  3/4 கப் சர்க்கரை சேர்த்து கிளறி, சுருண்டு வரும் பொழுது அடுப்பை அணைக்கவும்.



சூடாகவோ, ஃப்ரிஜில் வைத்தும் பறிமாறலாம்.

இதே முறையில் பலா ரவா பாயாசம் செய்ய:
1 கப் ரவைக்கு, 1 கப் சர்க்கரை
1/2 கப் பலா நறுக்கியோ, துருவியோ
பால்  தேவையான அளவு, ஏலக்காய்
நெய் , முந்திரி....

இதே முறையில் செய்து, இறுதியில்  பால் சேர்க்கவும்.
(சர்க்கரை சேர்த்து கரைந்ததும் , அடுப்பை சிம்மரில் வைத்து பால் சேர்க்கவும் )






No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...